/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ேஷாரூம் ஜன்னலை உடைத்து ரூ.1.58 லட்சம் திருட்டு; கள்ளக்குறிச்சியில் துணிகர சம்பவம்

ADDED : ஜன 02, 2025 06:30 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் காலணி ேஷாரூமின் ஜன்னலை உடைத்து, கல்லாவில் இருந்த ரூ.1.58 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவானந்தம் மகன் குப்புசாமி,61; இவர், அபிராமி அப்பார்ட்மெண்ட் அருகே காலணி ேஷாரூம் வைத்துள்ளார். ேஷாரூமில், கடந்த 27ம் தேதி 53 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், 28ம் தேதி  ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 349 ரூபாய்க்கும் விற்பனை நடந்துள்ளது. 29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதால், இரண்டு நாட்கள் விற்பனை பணத்தை கல்லா பெட்டியில் வைத்துள்ளார்.
தொடர்ந்து, கடந்த 30ம் தேதி  காலை ஊழியர்கள் வழக்கம்போல் கடையினை திறந்தனர். அப்போது, கடையின் இடதுபுறத்தில் உள்ள சிமென்ட் ஜன்னல் உடைந்த நிலையிலும், கல்லா திறந்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, கல்லாவை பார்த்ததில் அதில் இருந்த ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 429 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.  தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். புகாரின் பேரில்  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.