ADDED : மார் 25, 2026 09:43 PM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில், பைக்கில் எடுத்துச் சென்ற ரூ. 1.74 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலை, காட்டுக்கோவில் அருகே நேற்று மதியம் 1:50 மணிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் வளமதி தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற பைக்கை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது, ரூ.1.74 லட்சம் பணம் கண்டறியப்பட்டது.
பணம் எடுத்துச் செல்வதற்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருக்கோவிலுார் தேர்தல் அலுவலர் நேர்முக உதவியாளர் அனந்தசயனனிடம் ஒப்படைத்தனர்.
