/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.18.68 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.18.68 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.18.68 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.18.68 லட்சம் வர்த்தகம்
ADDED : நவ 10, 2025 11:07 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 18.68 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 900 மூட்டை, வேர்க்கடலை 25, கம்பு 10, ராகி, எள் தலா 5, ஆமணக்கு, வரகு தலா ஒரு மூட்டை என 947 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 1,610, நிலக்கடலை 5,764, கம்பு 2,738, எள் 7,009, ராகி 3,535, எள் 8,240, ஆமணக்கு 7,009, வரகு 1,716 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் நேற்று மொத்தமாக 18 லட்சத்து 68 ஆயிரத்து 83க்கு வர்த்தகம் நடந்தது.
இதேபோல், சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளம் 60 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு மூட்டை மக்காச்சோளம் 1,913 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 351 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் கமிட்டியில் மக்காச்சோளம் 95 மூட்டை, நெல் 50, கம்பு 15, உளுந்து 2 மூட்டை என மொத்தம் 162 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக மக்காச்சோளம் 1,900 ரூபாய், நெல் 1,950, கம்பு 3,200, உளுந்து 4,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 745 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

