/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனி நபர் நிறுவனங்களுக்கு ரூ.20.72 கோடி மானியம்! 3 ஆண்டில் மத்திய, மாநில அரசு வழங்கல்
/
தனி நபர் நிறுவனங்களுக்கு ரூ.20.72 கோடி மானியம்! 3 ஆண்டில் மத்திய, மாநில அரசு வழங்கல்
தனி நபர் நிறுவனங்களுக்கு ரூ.20.72 கோடி மானியம்! 3 ஆண்டில் மத்திய, மாநில அரசு வழங்கல்
தனி நபர் நிறுவனங்களுக்கு ரூ.20.72 கோடி மானியம்! 3 ஆண்டில் மத்திய, மாநில அரசு வழங்கல்
ADDED : நவ 28, 2024 05:34 AM

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த திட்ட விளக்கக் கையேடினை கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார்.
அதில், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வரும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதமர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தப்படுத்தும் திட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மாநில முதலீட்டு மானியம், குறைந்தழுத்த மின் மானியம், பின்முனை வட்டி மானியம், ஊதிய பட்டியல் மானியம், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மானியம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதனை பெறும் வழிமுறைகள் இடம் பெற்றுள்ளது.
மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 403 நபர்களுக்கு ரூ.3.12 கோடி மானியம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாடு திட்டத்தின் கீழ் 43 நபர்களுக்கு ரூ.4.48 கோடி மானியம், அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 78 நபர்களுக்கு ரூ.4.86 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 220 நபர்களுக்கு ரூ.5.52 கோடி மானியம், மாநில முதலீட்டு மானியமாக 18 நிறுவனங்களுக்கு ரூ.2.45 கோடியும், மின்மானியமாக 29 நிறுவனங்களுக்கு ரூ.29.07 லட்சம் அரசு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாவட்டத்தில் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கையேடுகள் மூலம் அறிந்து பயன்பெறுமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.திட்ட விளக்கயேடு வெளியீட்டின் போது மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.