/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ. 4 கோடியில் மாணவியர் விடுதி கட்டும் பணி... தீவிரம்; அரசு கல்லுாரி பிரச்னைக்கு விரைவில் தீர்வு
/
ரூ. 4 கோடியில் மாணவியர் விடுதி கட்டும் பணி... தீவிரம்; அரசு கல்லுாரி பிரச்னைக்கு விரைவில் தீர்வு
ரூ. 4 கோடியில் மாணவியர் விடுதி கட்டும் பணி... தீவிரம்; அரசு கல்லுாரி பிரச்னைக்கு விரைவில் தீர்வு
ரூ. 4 கோடியில் மாணவியர் விடுதி கட்டும் பணி... தீவிரம்; அரசு கல்லுாரி பிரச்னைக்கு விரைவில் தீர்வு
ADDED : அக் 23, 2024 06:32 AM

கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. இக்கல்லுாரியில் பி.ஏ.,-தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி.,- கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் என 7 இளங்கலை பாடப்பிரிவுகள், எம்.ஏ.,-ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி.,-கணிதம், கணினி அறிவியல் என, 4 முதுகலை பாடப் பிரிவுகளுடன் இயங்கி வருகிறது.
இங்கு சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தற்போது சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே புதிய கட்டடத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது.இக்கல்லுாரியில் வெளியூர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு தனி விடுதிகளும் உள்ளன. இதில் மாணவர்களுக்கான கல்லுாரி விடுதி கட்டடம் தண்டலை - பெருவங்கூர் சாலையில் உள்ளது. 80 மாணவர்கள் தங்கி பயில்கின்றனர்.
அதேபோல் 60 மாணவிகள் விடுதியில் தங்கி பயில்கின்றனர். ஆனால் மாணவிகள் விடுதிக்கு சொந்த கட்டடம் இல்லாத நிலையில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பள்ளி மாணவிகள் விடுதியில், தற்காலிகமாக கல்லுாரி மாணவிகள் விடுதி செயல்படுகிறது.
அங்கு கல்லுாரி மாணவிகளுக்கான போதிய அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, இடப்பற்றாக்குறையால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனையொட்டி கல்லுாரி மாணவிகளுக்கு என தனி விடுதி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையொட்டி கல்லுாரியின் பின்புறம் தாட்கோ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் கல்லுாரி வளாகத்திலயே 4 கோடி ரூபாய் மதிப்பில் மாணவியர் விடுதி அமைக்க முடிவு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு 100 மாணவிகள் தங்கும் வகையில் தரைதளத்தில் 8 அறைகள், முதல் தளத்தில் 8 அறைகளுடன் கட்டப்படுகிறது.
மேலும், கட்டட உட்புற அறைப்பகுதியிலேயே மாணவிகளுக்கான குளியலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் நீண்ட துாரம் சென்று வரவேண்டிய நிலையில்,தற்போது கல்லுாரி வளாகத்திலயே விடுதி அமைப்பதால் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.