/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.6.25 லட்சம் வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.6.25 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.6.25 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.6.25 லட்சம் வர்த்தகம்
ADDED : ஆக 18, 2025 11:36 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 6.25 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 250 மூட்டை, கம்பு 5, உளுந்து, எள் தலா 2 மூட்டை மற்றும் சிவப்பு சோளம், தேங்காய் பருப்பு தலா ஒரு மூட்டை என 262 மூட்டை விளை பொருட்களை கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,281 ரூபாய், கம்பு 2,370, வேர்க்கடலை 5,273, எள் 6,265, உளுந்து 4,149, சிவப்பு சோளம் 4,209, தேங்காய் பருப்பு 12,001 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 6 லட்சத்து 25 ஆயிரத்து 535க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு தானியங்கள் வரத்து இல்லாததால் நேற்றைய வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது. தியாகதுருகம் கமிட்டியில் நெல் 570 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக ஒரு மூட்டை நெல் 2,250 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 10 லட்சத்து 49 ஆயிரத்து 30 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.