ADDED : மார் 21, 2026 11:26 PM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலுார் தொகுதி, தேவனுார் அருகே ஜெய்சன் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் நேற்று இரவு 8:30 மணி அளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஸகூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஸ்கூட்டரில் ரூ. 80 ஆயிரம் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
தேவனுாரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் குணசேகர், 42; திருக்கோவிலுாரில் நகை வாங்குவதற்காக எடுத்துச் சென்றபோது பிடிபட்டது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படை பிரிவினர் திருக்கோவிலுார் தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.
