தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா முக்கியஸ்தர்கள் சந்திப்பு கூட்டம்

 ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா முக்கியஸ்தர்கள் சந்திப்பு கூட்டம்

 ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா முக்கியஸ்தர்கள் சந்திப்பு கூட்டம்


ADDED : பிப் 27, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு விழா முக்கியஸ்தர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் ஏ.என்.பி., மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு ராஜூ இருதய-தோல் மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபு சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., புதுச்சேரி கோட்ட தலைவர் டாக்டர்.மணிவண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.

500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்த ஆர்.எஸ்.எஸ்., தென் பாரத மக்கள் தொடர்பு செயலாளர் பிரகாஷ் பேசியதாவது :

துவங்கிய நாளிலிருந்து அதன் கொள்கையை மாற்றாமல் 100 ஆண்டுகளை கடந்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., ஆகும். இந்தியாவில் பிறந்த 141 கோடி பேரும் ஹிந்துக்கள்தான் எனும் நோக்கம் கொண்டது. இந்தியா உலகின் குருவாக உருவெடுத்து வருகிறது. விரைவில் சித்தாந்த ரீதியாக அகண்ட பாரதம் அமையும் எனக்கூறினார்.

குடும்ப நலன், சமுதாய நல்லிணக்கம், சுய சார்பு பொருளாதாரம், நீர் மேலாண்மை, சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் கடமைகள் எனும் ஆர்.எஸ்.எஸ்.,-ன் நுாற்றாண்டு திட்டத்தை நாம் அனைவரும் நம்மில் இருந்து துவங்குவோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இணை தலைவர் வழக்கறிஞர் காமராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us