ADDED : ஜூலை 14, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம், : சின்னசேலத்தில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குருபூஜை விழா நடந்தது.
சின்னசேலம் வாசவி மகாலில் நடந்த குருபூஜை விழாவிற்கு, மகா பாரதி பொறியியல் கல்லுாரி சேர்மன் மோகன் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மாநில செயலாளர் நீலகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, குருபூஜையின் சிறப்புகள், அதன் அவசியம் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., புதுச்சேரி கோட்ட தலைவர் டாக்டர் மணிவண்ணன், சின்னசேலம் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.