ADDED : ஜூலை 28, 2025 02:17 AM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த குருபூஜை விழாவில் இரு புத்தகங்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., மகாலில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குருபூஜை விழா நடந்தது. மாவட்ட தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். மகாலட்சுமி ரைஸ்மில் அதிபர் ராமச்சந்திரன், புதுச்சேரி கோட்ட தலைவர் மணிவண்ணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் பாலாஜி முன்னிலை வகித்தனர்.
வட உத்தர் தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். தலைவர் குமாரசாமி சிறப்புரையாற்றி, 'அறிவோம் ஆர்.எஸ்.எஸ்.,' மற்றும் 'பெண்ணுரிமை சட்டங்கள்' என்ற தலைப்பிலான இரு புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். அதன் பிரதிகளை ரைஸ் மில் அதிபர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் தாமோதரன், துணை தலைவர் சுப்பரமணியன், செயலாளர் சசிராஜன் மற்றும் நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.