/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.எஸ்.எஸ்., இளைஞர் சந்திப்பு கூட்டம்
/
ஆர்.எஸ்.எஸ்., இளைஞர் சந்திப்பு கூட்டம்
ADDED : ஆக 15, 2025 10:50 PM

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அகண்ட பாரதம் குறித்த இளைஞர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். அறிவுசார் பிரிவு மாநில இணை செயலாளர் சீனிவாசன் மாணவர்களுக்கு பாரதத்தின் வரலாறு குறித்து பேசுகையில், 'கடந்த 3000 ஆண்டுகளாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கிய இந்தியா இப்போது வரை அதன் ஹிந்து கலாசாராத்தையும், பாரம்பரியத்தையும் இழக்காமல் இருந்து வருகிறது. நமது இளைஞர் சமுதாயம் இந்தியாவின் வரலாற்றை முழுமையாக படித்து, நமது எதிர்காலத்தை அகண்ட பாரதத்தை நோக்கி நகர்த்திட வேண்டும்' என்றார்.
தொடர்ந்து பங்கேற்ற அனைவரும் அகண்ட பாரதம் அமைந்திட வேண்டும் என விளக்கேற்றினர்.