/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2025 10:49 PM

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அட்டை அணிந்து ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் அழகுராஜா, பி.டி.ஓ., செல்வபோதகர், முன்னாள் மாவட்ட நிர்வாகி அரவிந்தன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, வட்ட செயலாளர் குமாரதேவன், மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம் கண்டன உரையாற்றினர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், முகாமிற்கான செலவினங்களுக்கு முறையாக நிதி விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் வீரபுத்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

