தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஊரக வளர்ச்சி திட்ட முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்

 ஊரக வளர்ச்சி திட்ட முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்

 ஊரக வளர்ச்சி திட்ட முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்


ADDED : ஜூலை 04, 2026 08:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 08:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் 'விபி ஜி; ராம் ஜி' திட்டம், முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம், முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தனித்தனியாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கடந்த 1ம் தேதி துவங்கிய 'விபி ஜி; ராம் ஜி' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அனைத்து தொகுப்புகளிலும் ஊராட்சிகளிலும் குளம் வெட்ட வேண்டும்.

பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராமின் யோஜனா திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும்.

மேலும், ஊராட்சிகளில் 4 வகையான குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தி குப்பைகளை பெறுவதுடன், டோல் பிளாசா, கல்லுாரிகள், மருத்துவமனை, பள்ளிகள் போன்ற இடங்களில் உள்ள குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

அத்துடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளில் நிலுவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், பி.டி.ஓ.,க்கள், துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us