/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத்திய அரசின் 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தால் தொழில் முனைவோர்களாகும் கிராமப்புற பெண்கள்
/
மத்திய அரசின் 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தால் தொழில் முனைவோர்களாகும் கிராமப்புற பெண்கள்
மத்திய அரசின் 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தால் தொழில் முனைவோர்களாகும் கிராமப்புற பெண்கள்
மத்திய அரசின் 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தால் தொழில் முனைவோர்களாகும் கிராமப்புற பெண்கள்
ADDED : ஜன 19, 2025 06:38 AM

ரிஷிவந்தியம்: பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து முடித்த கிராமப்புற பெண் ஒருவர், ட்ரோன் இயந்திரத்தின் மூலம் விளைநில பயிர்களுக்கு மருந்து தெளித்து வருமானம் ஈட்டி வருகிறார்.
நாட்டின் பிரதான தொழிலான விவசாயத்தில் நிலத்தை பதப்படுத்துதல், பயிர் நடவு, களை எடுத்தல், உரம் தெளிப்பு, அறுவடை, பயிர் உளர்த்துதல், மூட்டை பிடித்தல் உள்ளிட்ட வேலைகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால், விவசாய பணிகளில் இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இயந்திரங்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பணிகளை எளிமையாக செய்ய முடியும்.
இதில், பயிர்களில் பூச்சிக்கொள்ளி மருந்தினை தெளிக்க பெட்ரோல் மற்றும் பேட்டரி ஸ்பிரேயர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூலி ஆட்கள் பற்றாக்குறையால், கடந்த சில ஆண்டுகளாக 'ட்ரோன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூச்சிக்கொள்ளி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு ஏக்கர் பரப்பளவிலான பயிருக்கு, 5 - 10 நிமிடங்களில் மருந்து தெளிக்க முடியும். தொழில் முனைவோர் சிலர் 'ட்ரோன்' இயந்திரத்தின் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளித்து வாடகை பெற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.
'ட்ரோன்' விலை, பராமரிப்பு செலவு, பயன்படுத்தும் விதம், விளைநிலத்திற்கு எடுத்து செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால் ஆண்கள் மட்டுமே இந்த வேலையை செய்த நிலையில், தற்போது பெண்களும் இந்த பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த கொம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சரண்யா,31; பத்தாம் வகுப்பு முடித்தவர் கடந்த 4 ஆண்டுகளாக ஜி.அரியூரில் தையல் மற்றும் அழகுகலை கடை வைத்துள்ளார். கணவன் வெங்கடேசன், டிரைவராகவும், பெயிண்டராகவும் பணிபுரிகிறார். இவர்களுக்கு லக்ஷ்யபிரியா,14; பெர்நிஷா,9; ஆகிய இரு மகள்கள் உள்ளனர். விவசாயத்தில் ஆர்வம் உள்ள சரண்யாவுக்கு கடந்த 2024ம் ஆண்டு நண்பர்கள், உறவினர்கள் மூலமாக 'ட்ரோன்' பயிற்சி குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, உரிய வழிகாட்டுதல் படி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மத்திய அரசின் 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். அங்கு 10 நாட்கள் பயிற்சியும், சான்றிதழ் மற்றும் மானியத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான 'ட்ரோன்' இயந்திரமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சரண்யா 'ட்ரோன்' பயன்படுத்தி விளைநிலங்களில் மருந்து தெளித்து வருமானம் ஈட்டி வருகிறார். திருமணத்திற்கு பிறகு பெண்கள் பலர் தொழில் முனைவோராக விரும்புகின்றனர். ஆனால், சரியான யோசனை இல்லாததால், என்ன தொழில் செய்யலாம், தொழில் நுட்பம் சார்ந்த பணிகளுக்கு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறான கிராமப்புற பெண்களுக்கு, சரண்யாவின் இந்த பணி மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.
அதேபோல், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த நந்தினி,27; என்ற பட்டதாரி பெண்ணும் ட்ரோன் இயந்திரத்தின் மூலம் தொழில் முனைவோராகி உள்ளார்.

