/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
/
பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : செப் 21, 2024 05:32 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த முகாமிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விபத்து இல்லாமல் பாதுகாப்பான முறையில் பட்டாசு உற்பத்திப் பணி மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, பட்டாசு தயாரிப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேடும், தொழிற் சாலைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாமில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், உதவி ஆட்சியர் ஆனந்த் குமார்சிங், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சித்ரா, துணை இயக்குனர் பர்வதம், அரசு அலுவலர்கள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.