/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலப்பட பெட்ரோல் விற்பனை: தடுக்க கோரிக்கை
/
கலப்பட பெட்ரோல் விற்பனை: தடுக்க கோரிக்கை
ADDED : மார் 22, 2025 04:05 AM

கள்ளக்குறிச்சி: கலப்பட பெட்ரோல் விற்பனையை தடுக்க, பங்குகளில் ஆய்வு சான்று, அளவீடு கருவிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், வீட்டு உபயோக சிலிண்டர்களை உணவகம் மற்றும் கடைகளில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்; கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்; அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் காற்று பிடிக்கும் வசதி, குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்; கலப்பட பெட்ரோல் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு ஆய்வு சான்று, அளவீடு கருவிகள் பங்குகளில் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும்; என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
தொடர்ந்து கோரிக்கை மற்றும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் தாசில்தார்கள் சரவணன், நளினி, சேகர், சிலம்பரசன் மற்றும் நுகர்வோர் சங்க அருண்கென்னடி, சுப்ரமணியன், சம்பத், ரஜேந்திரன், மணி, எழிலன், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.