/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை அடிவார கிராமங்களில் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்
/
கல்வராயன்மலை அடிவார கிராமங்களில் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்
கல்வராயன்மலை அடிவார கிராமங்களில் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்
கல்வராயன்மலை அடிவார கிராமங்களில் பாக்கெட் சாராயம் விற்பனை ஜோர்
ADDED : ஜன 22, 2025 09:31 AM
சங்கராபுரம் : கல்வராயன்மலை அடிவார கிராமங்களில் மீண்டும் பாக்கெட் சாராய விற்பனை அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் பாக்கெட் சாராயம் கிராமம் கிராமமாக சென்று விற்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 60 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து கல்வராயன்மலை உள்பட மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட்டது.கல்வராயன்மலையில் அதிரடிபடை போலீசார் கிராமம் கிராமமாக ரோந்து சென்று சாராயம் காய்ச்சுவோர்.,விற்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டதால் கள்ளச் சாராயம் விற்பனை கட்டுக்குள் வந்து ,சாராயம் இல்லா மாவட்டமாக திகழ்ந்தது.
ஆனால் தற்போது நிலை மாறியுள்ளது. கல்வராயன்மலையில் இருந்து அடிவார கிராமங்களுக்கு பைக் முலம் கள்ளச் சாராயம் கடத்தி வரப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன்மலையில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்கும் பொருட்டு மலை அடிவாரங்களில் 6 இடங்களில் காவல்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக சோதனைச்சாவடிகளிலிருந்த போலீசார் விலக்கி கொள்ளப்பட்டனர். இதனால் கல்வராயன்மலையில் மீண்டும் கள்ளச் சாராயம் காய்ச்சி பாக்கெட்டுகளில் அடைத்து பைக்கில் சாராய வியாபாரிகள் கல்வராயன்மலை அடிவார கிராமங்களான தும்பை,பாச்சேரி,மோட்டாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விற்பனை செய்துவந்தனர்.
தற்போது பொங்கலிலிருந்து விற்பனை சூடு பிடித்துள்ளது.
கல்வராயன்மலையில் 6 மாதமாக முற்றிலும் தடை செய்யபட்டிருந்த கள்ளச் சாராயம் மீண்டும் விற்கப்படுவதை தடுக்க மாவட்ட எஸ்.பி., துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.