/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி அலங்கார பொருள் விற்பனை ஜோர்
/
மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி அலங்கார பொருள் விற்பனை ஜோர்
மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி அலங்கார பொருள் விற்பனை ஜோர்
மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி அலங்கார பொருள் விற்பனை ஜோர்
ADDED : ஜன 15, 2025 12:19 AM

கள்ளக்குறிச்சி, ;மாட்டு பொங்கல் பண்டிகையொட்டி மாடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்களின் விற்பனை படுஜோராக நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் விவசாயத்திற்காக உழைக்கும் மாடுகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அதனை அலங்கரித்து பொல்கல் வைத்து படையலிட்டு வழிபடும் மாட்டு பொங்கல் இன்று (15 ம்தேதி) கொண்டாடப்படுகிறது.
அதற்காக மாடுகளை குளிப்பாட்டி பொட்டு, குங்குமம் வைத்து, மாடுகளின் கழுத்து, கொம்பு, மூக்கில் புதிய கயிறு மாட்டி, கொம்பு சீவி அதற்கு வண்ணம் தீட்டி, மாலையில் வண்டி பூட்டி தெருவில் சுற்றி வருவர்.
இதனையொட்டி மாடுகளுக்குத் தேவையான கயிறுகள், மணிகள் போன்ற பல்வேறு வகையான அலங்கார பொருட்கள் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு, மந்தைவெளி போன்ற பல்வேறு இடங்களில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பலர் தங்களது மாடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.