ADDED : ஏப் 28, 2025 03:55 AM
ஏ.கே.டி., நிறுவனம் உணவு வழங்கல்
மாணவ, மாணவிகள் எளிதாக நீட் மாதிரி தேர்வு எழுதுவதற்காக, ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகமும், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களும் தேவையான உதவிகளை செய்திருந்தனர். தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏ.கே.டி., கல்வி நிறுவனம் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏ.கே.டி., டெக்ஸ்டைல்ஸ் சார்பில் 5 சதவீத தள்ளுபடி கூப்பன் வழங்கப்பட்டது. இந்த கூப்பனை பயன்படுத்தி வரும் 30ம் தேதி வரை ஜவுளி வாங்கும் அனைவருக்கும், மொத்த விலையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
கடைசி நேர பதற்றம் வேண்டாமே
நீட் மாதிரி தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு, 9:00 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருந்தது. இதை பெரும்பாலான மாணவர்கள் கடைபிடித்து நேரத்திற்கு மையத்திற்கு வந்திருந்தனர்.
சில மாணவர்கள் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக தேர்வு மையத்திற்கு வந்தனர். மாதிரி தேர்வு என்பதாலும், மாணவர்கள் இத்தேர்வு மூலம் பயிற்சி பெற வேண்டுமென்பதற்காகவும், தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதே தவறை, மே மாதம் 4ம் தேதி நடக்கும் நீட் தேர்விலும் செய்துவிட வேண்டாம்.உரிய காலத்திற்குள் தேர்வறையில் இருந்தால்தான், இறுதி நேர பயம், படபடப்பில் இருந்து விடுபட்டு ரிலாக்ஸாக தேர்வெழுத முடியும். நீட் தேர்வு எத்தனை மணிக்கு துவங்குகிறது என்பதை கணக்கிட்டு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
தேர்விற்கு இதை கொண்டு போகாதீங்க
நீட் தேர்வு மையத்திற்குள் மாணவ, மாணவியர்கள் வாட்ச் அணிந்து வரக் கூடாது. மொபைல் போன் எடுத்து வரக் கூடாது. வளையல், கம்மல், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்கள், ேஹர்பின், ேஹர் கிளிப் அணிந்து வர தடை உள்ளன. இதுதொடர்பாக 'தினமலர்' நாளிதழில் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் சில மாணவியர்கள், அதே தவறை செய்தனர். இவர்களுக்கு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. தொடர்ந்து மாணவிகள் ேஹர்பின், ேஹர் கிளிப் ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு, நுழைவு தேர்வை எழுத சென்றனர். மொபைல் போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒப்படைத்து விட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகொடுத்த மாதிரி தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வினை எழுத பள்ளி கல்வித் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்று ஆர்வமாக எழுதினர். 'தினமலர் நீட்' மாதிரி தேர்வு மூலம் தன்னம்பிக்கை பெற்றதாக தெரிவித்தனர்.
முதலில் வந்த மாணவி
நீட் மாதிரி தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தியாகதுருகத்தைச் சேர்ந்த மாணவி கரிஷ்மா தேர்வு மையத்திற்கு முதல் ஆளாக காலை 7:00 மணிக்கே வந்திருந்தார். கள்ளக்குறிச்சி எலைட் மாதிரி பள்ளியில் பயிலும் மாணவி கரிஷ்மா தேர்வு துவங்கும் வரை ரிலாக்சாக பாடங்களை மீள்பார்வை செய்து கொண்டிருந்தார்.
மாற்றுத்திறனாளி மாணவி ஆர்வம்
வாணாபுரம் தாலுகா, பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் புவனா என்ற மாற்றுத்திறனாளி மாணவி நீட் மாதிரி தேர்வு எழுத அவரது தாய் அமுதா, தனியாக ஆட்டோ ஏற்பாடு செய்து தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தார்.
ரூ.5,000 கட்டண சலுகை
ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி சார்பில் மாணவர்களுக்கு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 'தினமலர்' நாளிதழ் சார்பில் நேற்று நடந்த நீட் மாதிரி தேர்வினை எழுதிய மாணவ, மாணவிகள், ரிப்பீட்டர் நீட் பயிற்சிக்காக ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமியில் சேரும் பட்சத்தில், அவர்களுக்கு பயிற்சி கட்டணத்தில் 5,000 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

