ADDED : நவ 20, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம், : சின்னசேலம் கடைவீதியில் அரண்மனை விநாயகர் கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூலவர் விநாயகருக்கு 17 வகையான மூலிகைகளால் அபிஷேகம் செய்து மகா தீபாராதாணை காண்பிக்கப்பட்டது. உற்சவர் விநாயகர் ராஜ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.