/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கை தமிழ் சங்க இலக்கிய விழா
/
சங்கை தமிழ் சங்க இலக்கிய விழா
ADDED : டிச 23, 2024 11:09 PM

சங்கராபுரம்; சங்கை தமிழ் சங்கம் சார்பில் இலக்கிய விழா மற்றும் மாவட்ட அளவில் சிலம்பம், குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்க தலைவர் சுப்ராயன் தலைமை தாங்கினார். காப்பாளர் லட்சுமிபதி முன்னிலை வகித்தார். செயலாளர் சாதிக் வரவேற்றார்.
சங்கராபுரம் பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் முத்துக்கருப்பன், தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன், அரிமா மாவட்ட தலைவர் வேலு, கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வைக்கம் போராட்டத்தில் பெரியார், அம்பேத்கரும் சட்டமும், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய தலைப்புகளில் ஓய்வு பெற்ற கலால் உதவி ஆணையர் சண்முகசுந்தரம், தமிழ் சங்க தலைவர் சுப்ராயன், தமிழ் வழி கல்வி இயக்க மாநில தலைவர் சின்னப்பதமிழர் ஆகியோர் பேசினர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுனர் சூரியமூர்த்தி ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
சங்க புரவலர் அன்புமணி நன்றி கூறினார்.