/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணி
/
துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 19, 2024 11:50 PM
சின்னசேலம்: சின்னசேலத்தில் துாய்மை சேவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சின்னசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியை ு மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
பள்ளி தலைமயைாசிரியை ராஜலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர் சார்லஸ் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா வரவேற்றார்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆசிரியர் ராஜன், பேரூராட்சி மேற்பார்வையாளர்கள் சீனு, சுரேஷ், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.