UPDATED : அக் 06, 2026 04:17 AM
ADDED : அக் 05, 2026 05:56 PM

அ நிறம் | அளவு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில், நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் எலக்ட்ரீசியன், பிளம்பர், குடிநீர் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
