ADDED : செப் 19, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் துாய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் துாய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் சரியாக வருங்குவதில்லை, ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அதிக நேரம் பணி புரிவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக குற்றம் சாட்டி பழைய பேரூராட்சி அலுவலகம் இருந்த பகுதி முன் 65 துாய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து நேற்று காலை 6:00 மணியளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து 6:30 மணிக்கு கலைந்து பணிக்கு சென்றனர்.
