சங்கராபுரம் சட்டசபை தொகுதி பொது பார்வையாளர் பார்வை
சங்கராபுரம் சட்டசபை தொகுதி பொது பார்வையாளர் பார்வை
ADDED : மார் 20, 2026 06:11 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பொது பார்வையாளர் ஓட்டுச்சாவடி மையங்களை பார்வையிட்டார்.
சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பொது பார்வையாளர் சுச்சி தியாகி ஓட்டுச்சாவடி மையங்களை பார்வையிட்டார். சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 12 ஓட்டுச்சாவடி மையங்களை பார்வையிட்டு, ஓட்டுச்சாவடி மையங்களில் மின் வசதி, குடிநீர், சாய் தளம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்தார். உடன் சங்கராபுரம் நடத்தும் தேர்தல் அலுவலர் சிராஜூதீன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வைரக்கண்ணன், வாசுதேவன் மற்றும் தேர்தல் தாசில்தார் கோதண்டராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
