ADDED : அக் 26, 2024 07:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்ககராபுரம் வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடி நாள் மற்றும் ஐப்பசி மாத பூச விழா நடந்தது.
மன்ற பொருளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், சந்திரசேகர், தணிக்கையாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, தலைமை ஆசிரியர் வெங்கடேசன் முன்னிலையில் அகவல் படித்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஜெயபிரகாஷ் சன்மார்க்க கொடி ஏற்றினார். திருக்குறள் பேரவைச் செயலாளர் லட்சுமிபதி வரவேற்றார்.
மாலையில் நடந்த மாத பூச விழாவிற்கு மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். டாக்டர் நாச்சியப்பன், முன்னாள் தலைவர் அருணாசலம், அசேலன், அரிமா மாவட்ட தலைவர் வேலு, இளையாபிள்ளை பங்கேற்றனர்.