ADDED : ஜன 22, 2024 12:41 AM

கள்ளக்குறிச்சி : தொட்டியம் கிராமத்தில் ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தரம், துணை முதல்வர் ஜான் விக்டர் முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறைத் தலைவர் சக்திவேல் வரவேற்றார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சரண்யா, ஜனனி வாழ்த்திப் பேசினர். சிறப்பு அழைப்பாளராக தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, இன்றைய சூழலில் மழைக்கான தேவை குறித்தும், மரம் வளர்த்தலின் அவசியம் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து, மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கல்லுாரி மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடப்பட்டது.
நிகழ்ச்சியின் போது, கல்லுாரி உதவி பேராசிரியர்கள் கார்த்திகா, பாரதி, அன்பரசன், செந்தில்குமார் உடனிருந்தனர். கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியை சந்திரபிரியா நன்றி கூறினார்.