/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி
/
சாரதா வித்யாஷ்ரம் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி
ADDED : மே 15, 2025 02:47 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், சாரதா வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
திருக்கோவிலுார், சாரதா வித்யாஷ்ரமம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சியை அளித்துள்ளனர். மாணவி ஜனனி, 492 மதிப்பெண் பெற்று, பள்ளியிலும் திருக்கோவிலுார் வட்டாரத்தில் முதலிடத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் ஹரிணிபிரியா பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் கார்த்திகேயன், தாளாளர் பிரபுசிவராஜ் ஆகியோர் பாராட்டினர்.
மாணவர்களின் தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர்கள் மீனாட்சி, ஆனந்தன் மற்றும் வகுப்பு ஆசிரியர்களை பாராட்டி இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.