/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 17, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் சரஸ்வதி வித்யாலயா பிரைமரி பள்ளியின் 30ம் ஆண்டு விழா அரகண்டநல்லுார் லட்சுமி வித்யாலயா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி நிர்வாகி மோகன் குமார் தலைமை தாங்கினார். முதல்வர் வளர்மதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆடிட்டர் பிரேம் முன்னிலை வகித்தார்.
கலை நிகழ்ச்சிகளில் வென்ற மாணவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கி துணை மேலாளர் சைமன் பரிசு வழங்கி பேசினார்.
விழாவில், பள்ளி செயலாளர் கவுதம், அறக்கட்டளை உறுப்பினர் ஐஸ்வர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.