/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி விசாரணை நடத்த வேண்டும் கலந்தாய்வுக் கூட்டத்தில் எஸ்.பி., அறிவுறுத்தல்

ADDED : ஜன 12, 2024 04:16 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு எஸ்.பி., சமய்சிங் மீனா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதைய நிலைகள் குறித்து எஸ்.பி., கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், டி.எஸ்.பி.,க்கள் கள்ளக்குறிச்சி ரமேஷ், திருக்கோவிலுார் மனோஜ்குமார், உளுந்துார்பேட்டை மகேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.