/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்று திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை: விண்ணப்பம் வரவேற்பு
/
மாற்று திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை: விண்ணப்பம் வரவேற்பு
மாற்று திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை: விண்ணப்பம் வரவேற்பு
மாற்று திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 18, 2024 08:41 PM
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறஇ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் 2024-25ம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை பெற தங்கள் அருகாமையில் உள்ளஇ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 2000 ரூபாய். 6 முதல் 8ம் வகுப்பு வரை 6,000 ரூபாய், 9 முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோவுக்கு 8000 ரூபாய், இளநிலை கல்விக்கு 12 ஆயிரம் ரூபாய், முதுநிலை கல்விக்கு 14 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.மேலும் பார்வையற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9முதல்12ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோவுக்கு 3000 ரூபாயும், இளநிலைக்கு 5000 ரூபாய், முதுநிலைக்கு 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் ஆராய்ச்சிப் படிப்பிற்கு ஒருலட்சம் வழங்கப்படுகிறது.
எனவே, மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று, கல்விச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் www.tnesevai.tn.gov.in/citizen/gov.in/citizen/registration.aspx என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

