sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு கல்வி உதவித்தொகை

/

முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு கல்வி உதவித்தொகை

முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு கல்வி உதவித்தொகை

முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு கல்வி உதவித்தொகை


ADDED : அக் 05, 2025 11:08 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின முஸ்லிம் மாணவ, மாணவியர் வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு;

தமிழ்நாட்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளைவழங்கவசதியாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க 3.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள் 2025-26ம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல், மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு, அறிவியல் வேளாண்மை, மருத்துவம், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல்,மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல்,நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து முதுகலை பட்டப்படிப்புக் கான சேர்க்கை பெற்றவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn. gov.in/welfschemes_minorities htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம் சென்னை-600005 என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us