/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆண்டு விழா
/
கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 29, 2024 06:18 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பங்காரம் பாரதி உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் துரைராஜ் தலைமை தாங்கினார். தாளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் லட்சுமி வரவேற்றார். விழாவில் தமிழ் கவிஞர் மன்ற தலைவர் ஆராவமுதன், தச்சூர் ஆக்சாலிஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் பரத்குமார், செயலாளர் சாந்தி பரத்குமார் சிறப்புரையாற்றினர்.
விழாவில், பாரதி கல்விக் குழுமத்தின் பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள் ராமசாமி, சாந்தி, சுமதி, புவனேஸ்வரி, வேலு, ஜார்ஜ், சிவா, லதா, ஜெயக்குமார், பூங்கொடி, குமரவேல் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாநில அளவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மற்றும் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.