
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 40வது ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். பள்ளி முதல்வர் ராமசாமி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், புதுச்சேரி வானொலி நிலைய சொற்பொழிவாளர் திருவள்ளுவன், சென்னை தனியார் டி.வி., அரட்டை அரங்க தொகுப்பாளர் செல்வகுமார், மயிலாடுதுறை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர்.
விழாவில் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். முதுகலை ஆசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.

