/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாச்சேரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
/
பாச்சேரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : மார் 22, 2025 08:38 PM

சங்கராபுரம் : கல்வராயன்மலையை சேர்ந்த பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துார்பா காந்தி பாலிகா உண்டு உறைவிட பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.
ஜி.டி.ஆர்., பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பத்மஸ்ரீ வரவேற்றார். கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில், விண்வெளிக்கு சென்று வந்த சுனிதா வில்லியம்சை வரவேற்பது உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஊராட்சி தலைவர் துரைசாமி, சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மஞ்சுளா, கவிதா, சகுந்தலா, ராதா, சலத்மேரி, ஜெயந்தி, தேசியமணி, கண்ணம்மா செல்வி பங்கேற்றனர். ஆசிரியர் இளவரசி நன்றி கூறினார்.