நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : மார் 04, 2026 05:39 AM

கச்சிராயபாளையம்: எடுத்தவாய்நத்தம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை உதவி திட்ட அலுவலர் மணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சரவணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஸ்ரீராமன் வரவேற்றார். கண்காட்சியில் ராக்கெட் இயங்கும் முறை, விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கியது, நீர் அலாரம், சூரிய குடும்பம், வீடு பாதுகாப்பு அலாரம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் மாதிரிகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஒயர் கூடைகள், மணிகள், ஹேர்கிளிப், வளையல், கீ செயின் மற்றும் அலங்கார பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி, தொடக்க கல்வி அலுவலர் பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.
