ADDED : செப் 02, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ஸ்கூட்டர் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சின்னசேலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சத்தியநாராயணன்,28; இவர், கடந்த 26ம் தேதி இரவு 11 மணியளவில் வீட்டிற்கு முன் தனது ஆக்டிவா ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து, மறுநாள் காலை எழுந்து பார்த்த போது ஸ்கூட்டர் இல்லாததால் அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடினார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் திருடு போன ஸ்கூட்டரை கண்டுபிடித்து தரக்கோரி சத்தியநாராயணன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
