/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் அடித்து சென்றவரை 6வது நாளாக தேடும் பணி
/
ஆற்றில் அடித்து சென்றவரை 6வது நாளாக தேடும் பணி
ADDED : டிச 18, 2024 07:51 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற தற்காலிக மின் ஊழியரை 6வது நாளாக தேடும் பணி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தற்காலிக மின் ஊழியரான மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரை சேர்ந்த திலீப்குமார் கடந்த 12ம் தேதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
அன்று முதல், சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். இன்னும் திலீப்குமார் கிடைக்கவில்லை.
நேற்று 6ம் நாளாக மாலை 5:00 மணி வரை தேடியும் கிடைக்காததால் இன்று 7ம் நாளாக தேடும்பணியை தொடர உள்ளனர். தேடும் பணியின் போது, மின்வாரிய செயற்பொறியாளர் ரகுநாதன், இளமின் பொறியாளர் ஜெயமூர்த்தி, அதிகாரிகள் இருந்தனர்.