ADDED : மே 16, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மயங்கி விழுந்த தனியார் மருத்துவமனை காவலாளி உயிரிழந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் பாண்டியன், 65; இவர் கச்சிராயபாளையம் எல்.எப்., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணிக்கு வந்தவர், நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.