UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: பிச்சநத்தம் ஏரியில் கிராவல் மண் திருடிய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரீத்தா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிச்சநத்தம் ஏரியில் இருந்து கிராவல் மண்ணுடன் வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து, கால் யூனிட் கிராவல் மண்ணுடன் இருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவர் மோ.வன்னஞ்சூரை சேர்ந்த மாணிக்கம் மகன் ஹரிகிருஷ்ணன், 34; மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் பிச்சநத்தத்தை சேர்ந்த அய்யப்பன் மனைவி சசிகலா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
