ADDED : செப் 28, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஏரியிலிருந்து அனுமதியின்றி வண்டல் மண் ஏற்றி வந்த டிராக்டரை சப் கலெக்டர் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தார்.
திருக்கோவிலுார் சப் கலெக்டர் கார்த்திக் ராஜா திருக்கோவிலுார் – ஆசனுார் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வண்டல் மண் ஏற்றி வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதிக்கான டிராக்டர் டிப்பர் பதிவு எண் இல்லாமல், திருக்கோவிலுார் பெரிய ஏரியிலிருந்து, வண்டல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து திருக்கோவிலுார் போலீசில் ஒப்படைத்தார்.
வி.ஏ.ஓ., தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
