ADDED : ஆக 12, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 57 கிலோ எடையுள்ள கஞ்சா பொருட்கள் எஸ்.பி., மேற்பார்வையில் அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டம், ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, ஸ்டேஷன்கள் மூலமாக பல்வேறு சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 57 வழக்குகளில் 26.712 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, நீதிமன்ற அனுமதி பெற்று, எஸ்.பி., ஷஹ்னாஸ் மேற்பார்வையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் அனைத்தும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குடோனில் அழிக்கப்பட்டது.
