/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அச்சத்தை போக்கிய மாதிரி தேர்வு
/
அச்சத்தை போக்கிய மாதிரி தேர்வு
ADDED : ஏப் 29, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயம் நீங்கி, அச்சத்தை போக்கியது
நீட் தேர்வு பற்றிய சரியான புரிதல் இன்றி வந்த எனக்கு, 'தினமலர்' நாளிதழ் நடத்திய நீட் மாதிரி தேர்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் நீட் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறேன்.
மே 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அரசின் விதிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட்ட நீட் மாதிரி தேர்வு எனக்கு ஒத்திகையாக அமைந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக எனக்கு இருந்த பயம் நீங்கி தெளிவு கிடைத்துள்ளது.
தொலை நோக்கு பார்வையுடன் மாணவ, மாணவிகளுக்காக மிகுந்த அக்கரையுடன் மேற்கொண்ட தினமலரின் கல்வி சேவை மகத்தானது.
- தனலட்சுமி, எஸ்.வி.பாளையம்.

