/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்வி கட்டண சலுகைக்கு தேர்வு
ADDED : டிச 06, 2024 06:29 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளியில் 50 சதவீதம் வரையிலான கல்வி கட்டண சலுகைக்கான தேர்வு வரும் 8ம் தேதி நடக்கிறது.
இது குறித்து ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் பொருளாதார சுமையையும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் ஆண்டுதோறும் கல்வி கட்டண சலுகை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவுகள் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஏ.கே.டி., நினைவு வித்யா சாகேத் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதன்முறையாக கட்டண சலுகைக்கான நேரடித் தேர்வு வரும் 8ம் தேதி நடத்தப்படுகிறது.
இச்சிறப்பு உதவித் தொகை தேர்வில் பங்கேற்று தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு 50 சதவீதம் வரை கல்வி கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
ஒரு கோடி ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இத்தேர்வில் 5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம்.
தேர்வில் பங்கேற்பவர்கள் 100 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்தி, 88835 96437, 04151-226655 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆன் லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஏ.கே.டி., சி.பி.எஸ்.இ., பள்ளிக்கும் நேரில் வந்தும் பதிவு செய்து கொள்ளலாம்.
தங்களது பிள்ளைகளின் எதிர்கால கல்வியை கருத்தில் கொண்டு பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.