/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு
/
மாற்றுத்திறனாளி பயனாளிகள் தேர்வு
ADDED : டிச 13, 2024 07:02 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பார்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு செயலியுடன் கூடிய திறன் பேசிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர்அலுவலகத்தில் 18 வயதுக்கு மேல் கல்வி பயிலும், பணிக்கு செல்பவர், சுயதொழில் செய்பவர்களுக்கு திறன்பேசி வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மனோகரன், உதவி மகளிர் திட்ட அலுவலர் வெங்கட்ராமன், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன், செயல்திறன் உதவியாளர் முனுசாமி ஆகியோர் பயனாளிகளை தேர்வு செய்தனர். 221 மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதில் 167 பேர் கலந்து கொண்டதில், 115 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

