/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி
/
கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி
கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி
கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி
ADDED : ஜூன் 20, 2025 04:02 AM
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
மாவட்டத்தில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம், 19-45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு, 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதற்கு 8ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்ட படிப்பு வரை கல்வி தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சுய தொழில் குறித்த மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தொழிலில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சிக்கு பின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி முடித்த இஞைர்கள் சுய வேலை வாய்ப்பில் ஈடுபட வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்கு கள்ளக்குறிச்சி மாடூர் டோல்கேட் அருகே உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் 7339414616 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், நிறைமதி கிராமத்தில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் அலுவலகம் மற்றும் 9952322947 ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு கட்டணமில்லா எண் 155330, 1900 309 9039 மூலம் அறியலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.