/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குட்கா விற்பனை: மளிகை கடைக்கு பூட்டு
/
குட்கா விற்பனை: மளிகை கடைக்கு பூட்டு
ADDED : அக் 16, 2024 04:22 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த சடைகட்டி கிராமத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
மணலுார்பேட்டை, சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் போலீசார் நேற்று சடைகட்டி கிராமத்தில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சோதனை செய்தனர்.
அங்கு ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட 430 கிராம் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் சரவணன், 55; அவரது மகன் பிரகாஷ், 22; உறவினர் சுரேஷ், 36; ஆகியோர் மீது மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பிரகாஷை கைது செய்தனர்.
குட்கா விற்பனை செய்த கடையை திருக்கோவிலுார் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சண்முகம் மேற்பார்வையில், வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.