/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
/
செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : செப் 11, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த பெத்தாசமுத்திரம் செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
தேர் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பொங்கல் வழிபாட்டுடன், இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி வீதியுலா நடந்தது.
நேற்று மதியம் 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மன் தேரில் எழுந்தருளினார்.
விழாவில், தோட்டப்பாடி, நயினார்பாளையம், வி.அலம்பலம், தாகம்தீர்த்தாபுரம், காலசமுத்திரம், தத்தாதிரிபுரம், வாசுதேவனுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்திருந்தனர்.