ADDED : மார் 06, 2026 06:13 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மின்னணு, மின்னணுவியல், இயந்திரவியல், கட்டடவியல் துறைகள் சார்பில் எம்.சி.இ., - 2026 துறை சார்ந்த தொலை நோக்கு என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் வரவேற்றார்.
கருத்தரங்கி ல் உளுந்துார்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவராமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 350க்கும் மேற்பட்டோர் ப ங்கேற்றனர்.
தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் கல்லுாரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
