/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் கருத்தரங்கம்
/
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஆக 22, 2025 10:03 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இயற்பியல் மற்றும் வேதியியல் துறை சார்பில் அனைத்து பட்டபடிப்பு மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியலின் புதுப்பரப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதியியல் துறை மாணவன் யுவனேஸ்வரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி ஆய்வுத்துறை தலைவர் சுந்தரமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர். இயற்பியல் துறை தலைவர் மணிகண்டன் தொகுத்து வழங்கினார். இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி கவிதா நன்றி கூறினார்.